Chennai News: சென்னை அயனாவரம் பூசனம் தெரு பகுதியை சேர்ந்தவர் கீதா கிருஷ்ணன் (50). இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு சூப்பர் வைசராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஆறு வயதான மான்சா என்ற மகள் இருந்தார். மான்சா அதே பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல், கீதா கிருஷ்ணன் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அயனாவரம் போலீசார் சம்பவ இடம் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது கீதா கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து கிடப்பதை பார்த்துள்ளனர். 


அருகில் அவரது மகள் மான்சா அசைவின்றி படுத்துள்ளதையும் கண்ட போலீசார் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மான்சா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய அயனாவரம் போலீசார் உடலை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-order-on-underground-sewer-cleaning-by-humans-460220


இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரித்த போது கீதா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீடு ஓட்டேரி சுப்புராயன் மெயின் தெரு பகுதியில் இருந்துள்ளது. அவரது வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு லீசுக்கு விடுவதாக கூறியுள்ளார். 


மேலும் படிக்க | 'நாட்டுக்காக மகனை ஒப்புக்கொடுத்துவிட்டேன்' - சந்திரயான்-3 வீரமுத்துவேலின் தந்தை பெருமிதம்!


அதன் பிறகு, கீதா கிருஷ்ணன் பணத்தை திருப்பி தராமல் வீட்டையும் லீசுக்கு விடாமல் இருந்துள்ளார். இதனால் லட்சுமிபதி நேற்று (ஆக. 23) காலை 10 மணி அளவில் கீதா கிருஷ்ணனுக்கு போன் செய்து பேசியுள்ளார். அதன் பிறகு அவர் போன் எடுக்காததால் நேரடியாக அயனாவரம் பூசனம் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது  கீதா கிருஷ்ணன் த இருப்பதைக் கண்டு போலீசாருக்கு அவர்  தகவல் கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதனை அடுத்து கீதா கிருஷ்ணன் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் கீதா கிருஷ்ணனுக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும் குணாலிஸ்ரீ மற்றும் மான்சா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் கோட்டூர்புரம் அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கீதா கிருஷ்ணன் முதலில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதனை விட்டுவிட்டு அதன் பிறகு கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.


கொரோனா காலகட்டத்தில் கீதா கிருஷ்ணனுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் கீதா கிருஷ்ணனும் அவரது மனைவி கல்பனாவும் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு  தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து முதலில் 13 வயதான குணாலி ஸ்ரீ  கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவரது தாய் கல்பனா தற்கொலை செய்துகொண்டார். 


கீதா கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ளாமல் பயந்து போய் வீட்டை விட்டு அப்பொழுது மூன்று வயதாக இருந்த தனது இளைய மகள் மான்சாவை தூக்கிக் கொண்டு திருப்பதிக்குச் சென்று அதன் பிறகு கோயம்பேடு வரும்போது போலீசார் பிடியில் சிக்கி கீதா கிருஷ்ணன் கைது செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 


அதன் பிறகு தனது குழந்தை உடன் அயனாவரம் பகுதியில் வசித்து வந்த கீதா கிருஷ்ணன் மீண்டும் கடன் பிரச்சனையில் நேற்று (ஆக. 23) இரவு தனது குழந்தையை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அயனாவரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


(தற்கொலை எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)


மேலும் படிக்க | கிருஷ்ணகிரியில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம்! பறிபோன உயிர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ