மக்களே உஷார் - 5ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.... வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
அந்தமான் கடல் பகுதிகளில் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ அந்தமான் கடல் பகுதிகளில் ஐந்தாம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.12.2022 மற்றும் 03.12.2022: தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
04.12.2022: தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நவம்பர் மாத தொடக்கத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் வலுவிழந்தது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலங்கையில் 23 தமிழ் மீனவர்கள்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
மேலும் படிக்க | லிப்டில் சிக்கிய மா.சுப்பிரமணியன் - ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி
மேலும் படிக்க | போலி ஆவணங்களை சமர்ப்பித்தாரா தனுஷ்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ