Tamil Nadu Weather, Cyclone | பெங்கல் புயல் (Fengal Cyclone) குறித்த முக்கிய அப்டேட் சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. அதன்படி, வங்க்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரமாக ஒரே இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக  மாறும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 30 ஆம் தேதி காலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே பெங்கல் புயல் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 29, 30 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அறிவிப்பில், " தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது.


மேலும் படிக்க | மெட்ரோ ரயில் பில்லரின் கம்பி கூடு சாய்ந்ததால் பரபரப்பு!


இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில்  புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


லேட்டஸ்ட் தகவலின்படி, சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியது. அதிகபட்சம் இன்று மாலை - நாளை அதிகாலைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனழைக்கு வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | கனமழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ