காவலர்களின் பாதுகாப்பு, மன உளைச்சல் போன்ற விஷயங்கள் குறித்து சில நாட்களாக பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் வெளியாகி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு இடங்களில் காவலர்களுக்காக கவுன்சிலிங் தரப்படுகிறது.


காவலர்களுக்கு எப்பொழுதும் ஆபத்து காத்திருக்கிறது என்ற கூற்று நிஜம் என்பது போல அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் அமைகிறது.


கடந்த 3ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலிசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று  காவல் உதவி ஆய்வாளரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.


படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


மேலும் படிக்க | உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி


இந்நிலையில் இரண்டு நாள் சிகிச்சைக்குப்பின் இன்று அவர் வீடு திரும்பியுள்ளார்.


மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதற்கிடையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 



மேலும் படிக்க | குழந்தைகள் பாலியல் வன்கொடுமை..பெண்கள் சித்ரவதை..ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் குற்றச்சாட்டு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR