தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!
Tamil Nadu Rain: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல நாட்களக வாட்டி வதைத்த வெயிலை தணிக்கும் வகையில் இன்று சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்று மற்று வெப்ப சலனம் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையின் முக்கிய நகர் பகுதிகளாக கருதப்படும் சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், கிண்டி, வேளச்சேரி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.
வாட்டி வதைத்த வெயில்:
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கோடைக்கு முன்பிருந்தே, வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. அதிலும் மே மாதம் முழுவதும் மக்கள் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்ப்பட்டனர். மீறி வெயிலில் வெளியே வந்தவர்கள் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டனர்.அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே, அக்னியாய் கொளுத்தியது சென்னை. மே மாதம் முடிந்த நிலையிலும் சென்னையில் வெயில் குறைந்த பாடில்லை. இந்த நிலையில், இன்று சென்னையின் சில் பகுதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
எந்தெந்த இடங்களில் மழை:
சென்னையில் பல நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிப்பட்ட நிலையில், அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இன்று மழை பெய்துள்ளது. சைதாப்பேட்டை, வடபழனி என நகரின் பல முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம்,அம்பத்தூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு?
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி, அம்பத்தூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கலவை, சென்னை செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சுற்று வட்டார பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வேப்பூர், விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், கயல்பட்டு மற்றும் கடலூர் பகுதிகளிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ