தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

தமிழகத்தில் நிலவி வரும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  ஜூன் 12 & 14ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2023, 12:03 PM IST
  • வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு

    6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு

    1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்! title=

தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 12 ஆம் தேதியும் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை ஜூன் 14 ஆம் தேதியும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் ஆனது சுட்டு எரிந்து வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  முன்னதாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனிடையே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் ஆனது சுட்டு எரிந்து வருகிறது.  முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்து இருந்தார். 

மேலும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு! அன்புமணி ராமதாஸ் முக்கிய தகவல்!

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி போய் உள்ளதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து உள்ளது.  கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் சேலம் ஏற்காட்டில் குவிந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்காட்டில் கடந்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 8 நாட்கள் நடைபெற்றது. அந்த எட்டு நாட்களும் ஏற்காட்டில் அழகை ரசிக்க ஏளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர் இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி ஏற்காடு கோடை விழா நிறைவு பெற்றது இருப்பினும் ஏற்காடு கோடை விழாவை துவக்கத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று வரை இருக்கிறது.  தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணங்கள் ஏற்காட்டை நோக்கி படை எடுத்து வருகின்றனர் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதாலும் தங்கள் குடும்பத்தோடு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் ஏற்காட்டில் அழகை ரசிக்க குடும்பம் குடும்பமாக ஏற்காட்டில் குவியத் தொடங்கியுள்ளனர்

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இவர்கள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணாபூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, லேடிசீட், பக்கோடா பாயிண்ட் சேர்வராயன் குகை கோயில் பொட்டானிக்கல் கார்டன்,  போன்ற இடங்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர்.  படகு இல்லத்தில் குவித்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு பயண சீட்டு பெற்று படகு சவாரி செய்தனர்.  சுற்றுலா பயணிகளின் வாகனங்கள்  சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் ஒண்டிகடை அண்ணா பூங்கா படகு இல்ல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மேலும்  பத்து நாட்களுக்கு மேலாக ஏற்காட்டில் சுற்றுலா பணிகள் அதிகளவில் குவிந்து வருவதால் சாலையோர மற்றும் ஏற்காடு பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சாலையோர கடைகளிலும்  மற்ற கடைகளிலும் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளதால் கணிசமான வருமானத்தை ஈட்ட முடிவதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் - மகள் தற்கொலை!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News