சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் வரலாற்றில் இரண்டாவது முறையாக அதிக சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளுத்து வாங்கும் கனமழை:


தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டமான சென்னையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிலிருந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமாக பெய்து வந்த மழை, பிறகு சாரல் மழையாக மாறியது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. இதனால், சென்னையில் உள்ள பல முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்து குலம் போன்று காணப்படுகின்றன.


மேலும் படிக்க | Rain Alert: இதென்ன அதிசயம்..! சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கனமழை..!


 73 ஆண்டுகளுக்கு பிறகு..


சென்னையின் முக்கிய பகுதியான மீனம்பாக்கத்திலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த 73 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அதிக சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர், 1996ஆம் ஆண்டில் 28.22 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியிருந்தது. தற்போது வரை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ வரை மழை பதிவயாகியிருக்கிறது. இது, கடந்த 73 ஆண்டுகளிலேயே மிகவும் அதிகமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது மழையாகும். இந்த தகவலை, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பகிர்ந்துள்ளார். 


27 ஆண்டுகளில் இல்லாத மழை..


வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடைசியாக 1996ஆம் ஆண்டிற்கு பிறகு இது வரலாறு காணாத மழையாக இருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதற்கு முன்னர், 1996ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் கனமழை பெய்த போது அப்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 


முக்கிய சாலைகளில் நீர்த்தேக்கம்..


இன்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால், பலர் மழையில் மாட்டிக்கொண்டு வேலைக்கு செல்ல முடியாமல் தத்தளித்தனர். குறிப்பாக காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் நுழைவாயிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனம் ஓட்டிகளும் ரயில் பயணிகளும் கடுமையாக  அவதியுற்றுள்ளனர். சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உலக வர்த்தக மையத்தின் அருகே உள்ள சாலையில் 5 அடி அளவிற்கு தண்ணீர் நிற்பதால் அந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில மணிநேரத்திற்கு முன்னர் கிண்டியில் உள்ள கத்திபாரா சுரங்கப்பாதையில் மழைநீர் புகுந்தது. இதனால் அது சிறிது நேரத்திற்கு மூடப்பட்டிருந்தது. 


புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு:


கனமழை காரணமாக, ் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் கணிசமாக உயர தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிற ஏரிகளின் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 


மேலும் படிக்க | பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ