தமிழகத்தில் தொடரும் கன மழை! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  சென்னையை சுற்றி உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2023, 11:57 AM IST
  • சென்னையில் தொடரும் கனமழை.
  • வாகன ஓட்டிகள் கடும் அவதி.
  • பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தமிழகத்தில் தொடரும் கன மழை! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! title=

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்று முதல் தற்போது வரையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.  சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம், திருவேற்காடு, போருர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.  சென்னையில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து   பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மேம்பாலம் இரும்பூலியூர் சர்வீஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்பதால் வாகண ஒட்டிகள்,பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மழை நீரை வெளியேற்றும் பணியில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க | இன்று மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

மேலும், செங்கலபட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை பல்வேறு இடங்களில் மிதமான மழையும் ஒரிரு இடங்களில் கனமான மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.  அந்த வகையில் தாம்பரம் மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள இரும்பபூலியூர் சர்வீஸ் சாலையில் தற்போது மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஒட்டிகளும் பொது மக்களும் செல்ல முடியாத அளவுக்கு கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.  தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  தொடர் கனமழையால் ஓஎம்ஆர் சாலை துரைபாக்கத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் பகுதியில் தொடர் மழையால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவி வருகிறது. நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை தற்பொழுது வரை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வந்ததால் காலையில் அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள் இந்த சாலையை கடந்து செல்வதில் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  ஒஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் நிலையில் சாலை குறுகலாக மாறிய நிலையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதாலும் போக்குவரத்து பாதிப்பு நிலவி வருகிறது.  கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1146 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஜெமின் கொரட்டூரில் அதிப்படியாக 84 மி.மீ.மழையும், பூவிருந்தவல்லியில் 74 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னைக்கு குடி நீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுவட்டத்தில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரவரத்து அதிகரித்துள்ளது.காலை நிலவரப்படி ஏரிக்கு 1146 மன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில் 2403 கன அடியும், ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 19.17 அடியா உள்ளது. நேற்று ஏரியின் நீர்மட்டம் 2309 கன அடியாகவும் நீர்வரத்து 225 கன அடியாகவும் இருந்தது. 

மேலும் படிக்க | வாகன ஓட்டிகளே உசார்! பல இடங்களில் மழையால் போக்குவரத்து பாதிப்பு!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News