சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணம் செய்து திரும்பும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்க உள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால், இந்த பேருந்தின் பெயர் பீர் பஸ்.. என்ன சொல்கிறீர்கள் பீர் பஸ்ஸா? பஸ்ஸில் குடித்துவிட்டு புதுச்சேரிக்கு வரலாமா? என்று கேட்டால் அதிலும் சில கண்டிஷன்ஸ் உள்ளது என்கிறார்கள்.  சென்னையில் வசிக்கும் பல குடிமகன்களுக்கு ஒரு நாள் ஜாலியாக பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். வார இறுதி நாட்களை இப்படி ஜாலியாக கழிக்கும் குடிமகன்கள் ஏராளம். இவர்களை குறிவைத்து புதிய சேவையை வழங்க புதுச்சேரியை சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏன் டிக்கெட் கிடைப்பதில்லை? சென்னை அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன் விளக்கம்!


புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ‘பீர் பஸ்’ என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த பீர் பஸ் சேவை வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும்.  இந்த பீர் பேருந்தில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே புதுச்சேரியின் அழகை ரசிக்கலாம். அதே சமயம், பீர் பஸ் என்பதால் பஸ்சில் மது அருந்த முடியும் என்று யாரும் நினைக்க வேண்டாம். இது குறித்து அந்நிறுவனத்தின் அமைப்பாளர்கள் கூறும்போது, ​​‘பீர் பஸ்’ என அழைப்பதால், பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்க வேண்டாம், பேருந்தில் பீர் குடிக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் புதுச்சேரி அரசு அனுமதித்த இடத்தில் பேருந்து நிறுத்தப்படும். அங்கு பீர் அனுமதிக்கப்படும் என்றார்கள்.



சென்னையில் இருந்து ஒரே நாளில் 35 முதல் 40 சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சென்னைக்கு பேருந்து வரும், இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.  சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் அறிவிப்பு குறித்த செய்திகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவ்வப்போது அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.  கடந்த வாரம், புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள காட்குப்பத்தில் உள்ள தனியார் டிரைவ் த்ரூ பார், இளம் குடிகாரர்களை கவரும் வகையில், இன்று ஒரு நாள் மட்டும் பெண்களுக்கு மது இலவசம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Online Rummy Ban Bill: இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால்.. இவ்வளவு தண்டனையா? ஜாக்கிரதை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ