சென்னை: போக்குவரத்து செயல்முறையில் ஒரு புத்தம் புதிய அம்சத்திற்கு துவக்க இடமாக விளங்கவுள்ளது தமிழகம். இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலை அமையவுள்ளது. தமிழகத்தின் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலையை ஈரடுக்குப் பாலமாக அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்த விரிவான திட்ட அறிக்கை (DPR) மூன்று மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. அணுகு சாலைகளை எங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. 


ஈரடுக்கு சாலை அமைந்த பின்னர், மேலடுக்கில் துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளும், கீழே உள்ள தளத்தில் உள்ளூர் வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படும். 


இந்த ஈரடுக்கு சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) நிதியில் கட்டப்பட உள்ளது என நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் தீரஜ்குமார் தகவல் அளித்தார்.


ALSO READ: சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


இந்த ஈரடுக்கு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், போக்குவரத்து (Transport) செயல்முறையில் இது ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாக இருக்கும்.  மேலும், இந்த திட்டம் செயல்பாட்டுக்கி வந்தவுடன் 3 மணி நேரமாக உள்ள கண்டெயினர் லாரிகளின் பயண நேரம் 30 நிமிடமாக குறையும்.


இது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பறக்கும் சாலையில், மூன்று உள்நுழையும் வழிகளும், மூன்று வெளியேறும் வழிகளும் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.


எனினும், இதில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் படி, தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி, பறக்கும் சாலையில்,  ஏழு உள்நுழையும் வழிகளும், ஆறு வெளியேறும் வழிகளும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டு துவக்கப்பட்ட இந்த திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் இந்த திட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.   


ALSO READ: ரவுடிகளை அடக்குவதில் ஜெயலலிதாவைப் போல் செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: செல்லூர் ராஜு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR