சென்னை மாநகரத்தில் சர்வதேச தரத்திலான தர கட்டமைப்பு மற்றும் சேவைகளை ஏற்படுத்தும் நோக்கிலான சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை உருவாக்க சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த திட்ட ஒப்புதல் குழு மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை 2.0 திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
- சென்னை மாநகரத்தில் நிலபரப்பை மேம்படுத்துதல்
- கட்டமைப்புகளை மேம்படுத்த சிறப்பு கவனம்
- தமிழக கலாசாரத்தை பாதுகாத்தல்
- சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதக்
- நீர்நிலைகளை புதுபித்தல்
- நிலத்தடி நீரை மேப்படுத்துதல்
- சுற்றுலாவை மேம்படுத்துதல்
- சென்னையில் உள்ள நீர் வழிகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம்
- குப்பை கழிவுகளை கொட்டும் இடங்களை சீரமைத்து, அவற்றை பசுமை நிறைந்த இடங்களாக மாற்றுதல்.
- கழிவு மேலாண்மை மையங்கள் அமைத்து கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல்
- கட்டிட கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுதல்
- சந்தைகள், இறிச்சிக் கூடங்களை நவீனமாக்குதல்
- நகரம் எங்கும் மரங்கள் நடுதல்
- நகரத்தின் முக்கிய இடங்களில் மேம்பாலம் அமைத்தல்.
- ஏற்கனவே இருக்கும் பாலங்களை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும் நடவடிக்கை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர மேயராக பொறுப்பு வகித்த போது, சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கத்தில் சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR