54.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; திறந்து வைத்தார் முதல்வர்!

சுமார் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Last Updated : Jun 8, 2020, 11:41 PM IST
54.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; திறந்து வைத்தார் முதல்வர்! title=

சுமார் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (8.6.2020) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், வாரணாசி - கன்னியாகுமரி சாலையில், காளவாசல் சந்திப்பில் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், நாமக்கல், திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் 211 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள், ரயில்வே கடவிற்கு மாற்றாக 2 சாலை மேம்பாலங்கள், 2 சாலைப் பணிகள், பல்வழி பரிமாற்ற மேம்பாலம், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் சென்னை பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்கள்.

Coronavirus | தனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணம் ரூ. 3,000 என நிர்ணயம்...

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், வாரணாசி - கன்னியாகுமரி சாலையில், காளவாசல் சந்திப்பில் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

மேலும், மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், வாரணாசி - கன்னியாகுமரி சாலையில், செல்லூரில், சாலை மேம்பாலத்தின் வலதுபுறம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சேவை சாலை;  மதுரை வடக்கு மற்றும் மேற்கு வட்டம், எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் முதல் சர்வேயர் காலனி, மதுரை - அழகர் கோவில் - மேலூர் சாலை (மா.நெ. 72ஏ) மூன்றுமாவடி - ஐயர்பங்களா - பி & டி நகர் - ஆலங்குளம் - செல்லூர் குலமங்கலம் சாலை (MD947) ஆனந்தம் நகர் - ஆனையூர் சாலை (ODR) கூடல்நகர் வானொலி நிலையம் வரையிலான நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி சாலைகளை உள்ளடக்கிய இணைப்பு சாலையினை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் மற்றும் அகலப்படுத்துதுல், சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல், பேருந்து நிறுத்துமிடம் அமைத்தல், சிறுபாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் அகலப்படுத்துதல், தடுப்புச் சுவர் கட்டுதல், வடிகால் அமைக்கும் பணிகள்; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குமாரபாளையம் - பள்ளிப்பாளையம் - ஜேடர்பாளையம் - பாண்டமங்கலம் - வேலூர் சாலையில் பள்ளிப்பாளையம் ரயில்வே நிலையத்திற்கு அருகில் 20 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை; 

சர்வதேச விமான சேவை எப்போது திறக்கப்படும்; மத்திய அமைச்சரின் பதில்...

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், ஜோலார்பேட்டை – நாட்ராம் பள்ளி சாலையில் ரயில்வே கடவு எண்.86-க்கு மாற்றாக ஜோலார்பேட்டை மற்றும் கேதாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் ஜோலார்பேட்டையில் 21 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்; 

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பெரம்பலூர் - தஞ்சாவூர் சாலையில் ரயில்வே கடவு எண்.201-க்கு மாற்றாக அரியலூர் மற்றும் சில்லக்குடி ரயில் நிலையங்களுக்கிடையே அரியலூரில் 28 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்; 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், சித்திராம்பூரில் பாம்பாற்றின் குறுக்கே 18 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், கண்ணங்குடி - கூகுடி சாலையில் விருசுழி ஆற்றின் குறுக்கே கண்ணங்குடியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்: 

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், சென்னை வெளிவட்டச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்.48 (பழைய எண்.4) சந்திப்பில் நசரத்பேட்டையில் 42 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம்;

விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க 10,000 FPO-களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை மாவட்டம், கிண்டியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 17 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையக் கட்டடம்; என மொத்தம் 265 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், சாலைப் பணிகள், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) என். சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Trending News