சென்னை ரன்னர்ஸ் அமைப்பின் பதினைந்தாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் ட்ராக்கில் (Madras Motor Race Track) பிரம்மாண்டமாக மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. நான்கு பிரிவுகளாக நடைப்பெற்ற இந்த போட்டியில் பத்து வயது முதல் என்பது வயதுள்ளவர்கள் வரை போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு மெடல் வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நடுரோட்டில் பேருந்து மீது ஏறி தியானம் செய்த இளைஞர்!


டைப் ஒன்  வகை டையாபிடிஸால்(Type One diabetes)  பாதிக்கப்பட்ட நால்வர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டது தனிச்சிறப்பாக அமைந்தது. Type 1 diabetes உடன் நம்ம நாட்டில் நிறைய பேர் வாழ்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு இன்சுலின் சுறப்பதில் குறைபாடு உள்ளதால் அவர்கள் அதனை வெளியில் இருந்து  செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நான்கு முறை இன்சுலின் ஊசி மூலம் செலுத்த வேண்டியிருக்கும். 



குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரும் இதனால் பாதிப்படைகின்றனர். இக் குறைபாட்டுக்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. போட்டியில் பங்கேற்றவர்கள் பேசும் போது, இன்சுலின் இயல்பாக சுரக்க வைப்பதைத் தவிர எங்களால் எல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுவதற்காக ஓடினோம், மேலும் நாங்கள் மாரத்தானில் பங்கேற்றது இக்குறைப்பாட்டுடன் வாழும் குழந்தைகளுக்கு ஒரு உத்வேகமாக அமையும் 'என்று கூறினர்.


மேலும் படிக்க |  மேலூர் அருகே மாயமான இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR