செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிலர், ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்று ஊழியரை மிரட்டி ஓசியில் ஜூஸ் கேட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய மகிதா மீதும் தொடர்ச்சியான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து கொண்டே இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, மருத்துவர் ஒருவர் கருகலைப்பு செய்ததாக மகிதாவுக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரை வைத்துக் கொண்டு அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என ஆய்வாளர் மகிதா மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட தாம்பரம் ஆணையர் அமல்ராஜ், விசாரணை மேற்கொண்டு ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


மேலும் படிக்க | அண்ணாமலை டீமில் இருந்து விழுந்த அடுத்த விக்கெட் - மவுனம் கலைத்த திருச்சி சூர்யா


இந்த நிலையில் மறைமலைநகர் காவல் நிலையத்தில் மருத்துவர் பராசக்தி என்பவர், தனக்கு ஆய்வாளர் மகிதா மற்றும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் வரை கேட்பதாக புகார் அளித்தார். அதனை தொடர்ந்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மகிதா மற்றும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தாங்கள் கைது செய்யப்படுவோம் என அச்சமடைந்த மகிதா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.


அப்பொழுது, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். இதனால், ஆய்வாளர் மகிதாவை மறைமலைநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்த திட்டமின்னர். ஆனால், ஆய்வாளர் மகிதா தலைமறைவானார். பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடியதில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் பதுங்கி இருந்த ஆய்வாளர் மதிதாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்று இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, மகிதாக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | அதிமுக கூட்டணி அவசியமில்லை, தனித்தே சமக களம் காண தயார் - சரத்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ