ஜூலை 7... இளம்பெண் ஒருவர், பிரபல டிக்கெட் புக்கிங் நிறுவனத்தின் மூலம் புக் செய்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்தின் மேல்தளத்தில் அசதியுடன் படுத்துறங்கிய இளம்பெண் அதிகாலை 3 மணிக்கு சட்டென்று விழித்திருக்கிறார். யாரோ தன் மீது கைவைத்து தவறான முறையில் நடக்க முயன்றதை உணர்ந்தார். தனக்கு கீழே இருந்த தளத்தை பார்த்தபோது, சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் உறங்காமல் இருக்க, அப்பெண் அதிர்ச்சியானார். உடனே அவரிடம் என்ன செய்கிறீர்கள் என்று அதட்ட, 'அதற்கு என் கை என்னிடம் தானே இருக்கிறது' என்று பதில் கொடுத்திருக்கிறார். 'அந்த நபரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை ;  ஆனால் கையைப் பற்றி அவர் பேசியது' கிட்டத்தட்ட அவர்தான் இளம்பெண்ணின் மேல் கைவைத்தது என உறுதியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதிர்ச்சியடைந்த பெண், அதிகாலை 4 மணிக்கு டிக்கெட் புக்கிங் ஆப்பில் புகார் அளித்திருக்கிறார். 4.30 மணிக்கு பிரபல டிக்கெட் புக்கிங் ஆப், ஊழியர்களிடம் இருந்து பேருந்து உதவியாளருக்கு போன் வந்தது. ஆனால் அழைப்பை அவர் எடுக்காமல் துண்டித்தார். பின்னர், பேருந்தின் டிரைவருக்கு போன் செய்து பேருந்து பாதியில் நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் விழித்துக் கொள்ள இளம்பெண்ணிடம் நடந்தது குறித்து டிரைவர் விசாரிக்க, தனக்கு நடந்த கொடுமையைத் தெரியப்படுத்தினார். யார் என்று டிரைவர் விசாரிக்க, அது பேருந்தின் உதவியாளர் விஜயகுமார் என்று தெரியவந்தது. 



பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நபரே இது போன்ற நடந்து கொண்டது பேருந்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ' நீண்ட அதிர்வுகளுக்குப் பின், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்;  சென்னை சென்றதும் பேசிக் கொள்ளலாம்' எனப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. சென்னை நெருங்கியதும் பகல் விடிந்தது. பேருந்தில் இருந்தவர்கள் இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தார்கள். காவல்துறை வரை சம்பவம் சென்றால், 'உன் பெயர் வெளியே வந்துவிடும் ; அதனால் உன் பெயர் கெட்டுவிடும்' எனச் சொல்லியிருக்கிறார்கள். தனக்கு நேர்ந்த கொடுமையைப் பொருட்படுத்தாமல் இப்படி சொல்வதைக் கேட்டு இளம்பெண், மனமுடைந்து போயிருக்கிறார். 


பின்னர், பேருந்து சென்னை சென்றது. சக பயணிகள் இறங்கினார்கள். அப்போது பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட பேருந்து உதவியாளர் விஜயகுமாரும் தப்பியோடினார்.  குடும்பத்தினர் அறிவுறுத்தலால் இளம்பெண்ணும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர், டிக்கெட் புக்கிங் ஆப்பில் மீண்டும் தொடர்பு கொண்ட பெண், தன்னுடைய புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு, 'நீங்கள் பயணித்த பேருந்தின் நடத்துநர் நடவடிக்கை எடுப்பார்', என பதில் கொடுத்திருக்கிறார்கள்.



மேலும், முறையான பதில்கள் எதுவும் வராததால் அப்பெண், விரக்தியடைந்தார். உடனே தனக்கு நடந்த கொடுமையை வெளிச்சப்படுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைத்தையும் பதிவு செய்து ஆதங்கம் தெரிவித்தார். உடனே அரண்டு போன பிரபல டிக்கெட் புக்கிங் நிறுவனம் அந்த போஸ்ட்டை நீக்கச் சொல்லியும், அதற்கு பணம் கொடுக்கிறோம் என்றும் பேரம் பேசியிருக்கிறார்கள்.



இது பணம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல ; எனக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்க கூடாது என போஸ்ட்டை நீக்கம் செய்ய திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இதற்கிடையே, இளம்பெண்ணிற்கு நடந்த கொடுமையை மறைக்க, விஜயகுமாரைப் பணியில் இருந்து நீக்கியதாகவும், டிக்கெட்டிற்கான தொகையை திரும்ப அனுப்பியதாகவும் அவர் பயணித்த தனியார் பேருந்து நிறுவனத்தில் இருந்து பதில் கிடைத்தது. ஆனால் தப்பித்து ஓடியவர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. 



பெண்ணிற்கு பிரச்சினை என்றால் வெளியே சொல்லக்கூடாது ; பெயர் கெட்டுவிடும். சம்பந்தப்பட்ட டிக்கெட் புக்கிங் நிறுவனத்திடம் நடவடிக்கை எடுக்கச் சொன்னால் வேறொருவரை கைகாட்டி நகர்வது... இப்படி இருந்தால் பெண்களின் பாதுகாப்பு என்பது எங்கிருக்கும்?


மேலும் படிக்க | ”யாரையும் காப்பாற்ற முயலவில்லை” - கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல்


வளர்ந்த நாகரிக சமூகத்தில் இன்னும் பெண்களின் பாதுகாப்பு வளராமலே இருக்கிறது. தப்பியோடிய நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? பயணிகளின் பாதுகாப்பை தனியார் பேருந்துகளும், இடைத்தரகர் ஆப்புகளும் உறுதி செய்யுமா? எப்போது மாறும் இந்த நிலைமை. 


மேலும் படிக்க | கமுதி அருகே முது மக்கள் பயன்படுத்திய தாழிகள் ஏராளமானவை கண்டுபிடிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ