உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சில தீட்சிதர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி, குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக சர்ச்சையை எழுப்பினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள்


ஆளுநர் பேசிய விவகாரத்தில் இந்திய தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மருத்துவக் குழு, போலீசாருடன் வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து தீட்சிதர்களிடம் விசாரிக்கப்பட்டது. பின்னர் இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உண்மை எனவும் குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகைப்படங்கள் வெளியானது சடங்கு செய்த புகைப்படங்கள் எனவும் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் விளக்கம் அளித்து இருந்தார். விசாரணை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் அறிக்கையும் சமர்ப்பித்து உள்ளார். 



இந்நிலையில் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் சடங்கு செய்த புகைப்படம் என்று கருத்து தெரிவித்த நிலையில், தீட்சதீர்கள் சிறுமி ஒருவருக்கு, சிறுவன் தாலி கட்டுவதற்கு.. கையில் தாலி வைத்திருக்கும் 3 வினாடிகள் உள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இது குழந்தை திருமணங்கள் சிதம்பரம் கோயிலில் நடைபெற்றதற்கான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ