‘கராத்தே தியாகராஜன் அண்மையில் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் எனக்கு அறவே உடன்பாடில்லை’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அண்மையில்  கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தலைமை மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். இது குறித்து  தற்போது பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்


இந்நிலையில் பா சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏற்புடையதல்ல’ கராத்தே தியாகராஜன் அளித்த பேட்டியில் எனக்கு உடன்பாடில்லை அவருடைய பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு பாதகமானவை அவை ஏற்புடையதள்ள என்பது என்னுடைய கருத்து என்று பதிவிட்டுள்ள அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும்  கே.எஸ்.அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்  என்று கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.




காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ப.சிதம்பரத்தை இன்று அவரது இல்லத்தில் கராத்தே தியாகராஜன் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பை அடுத்து, ப.சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.