தலைமை தேர்தல் ஆணையர் ஏப்ரல் 2 தமிழகம் வருகை!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் தொடர்பாக 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார்.