தொழில்நுட்ப கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 26.8.2019 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்., "தொழில்நுட்ப கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி இயக்குநர் கே. விவேகானந்தன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்." என குறிப்பிடப்பட்டுள்ளது.