தமிழகம் முழுவதும் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 26.8.2019 அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கிழக்கு முதன்மை சாலையில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 35 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 69 கோடியே 44 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கிழக்கு முதன்மை சாலையில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 35 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி
(Video Conferencing) மூலமாக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.


மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 52 கோடியே 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர்; ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 13 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்; என மொத்தம் 72 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பள்ளிக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.


இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநர் பெ. குப்புசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டதாக என குறிப்பிடப்பட்டுள்ளது.