பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த ‘செக்’.!
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், நடைபெற்று முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காகவும் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை, அடையாறு கடற்படைத் தளத்தில் சிலப்பதிகாரம் புத்தகம் கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பளித்தார். இதன் பின்னர் நேரு ஸ்டேடியத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மேலும் படிக்க | தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்: தடை நீக்கி உத்தரவு!
அரசியல் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடியும் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மேடையில் பிரதமர் மோடியை அமர்ந்திருக்க, தமிழகத்துக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார். மேடையில் உரையாற்றிய அவர், இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்ன? என்று புள்ளிவிபரங்களுடன் பிரதமர் மோடி முன்னிலையில் எடுத்துரைத்தார். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 % இருப்பதாகவும், நாட்டின் மொத்த வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6% சதவீதம் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 சதவீதம் என்றும் அவர் கூறினார். ஆனால், தமிழ்நாட்டிற்கு பகிர்ந்து அளிக்கப்படும் வரி வருவாய் 1.21 சதவீதம் மட்டுமே என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், பிரதமரிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்தார்.
1. மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம்.!
2. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் கொடுக்கும் பங்கை, முடியும்வரை தொடர வேண்டும்.
3. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகையை விரைந்து வழங்க வேண்டும்
மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?
4. தமிழ் மொழியை இந்தி மொழிக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் கொண்டுவர வேண்டும்
5. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கான அனுமதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதுவே உண்மையான கூட்டுறவு கூட்டாட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR