ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டுவருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி,  அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான் ஜெய்ந்தி மற்றும் குருபூஜை நேற்று தொடங்கியது. நேற்று காலை நான்காம் கால வேள்வி பூஜை மற்றும் வேத பாராயணம், தீபாராதனை, யாத்ராதானம் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருடன் வந்து வட்டமிட்டதும் கோயில் கோபுரம் கலசம் மற்றும் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், அதிமுக எம்பி தர்மர், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இதற்கிடையே நாளை நடைபெறவிருக்கும் குருபூஜையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்தார். ஆனால் அவர் கலந்துகொள்ளமாட்டார் என தற்போது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று முதுகு வலி ஏற்பட்டதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிவிட்டார்.


மேலும் படிக்க | கோவையில் பந்த்; ஆனா அது அண்ணாமலைக்கே தெரியாது - பாஜக துணை தலைவர்


அதேசமயம் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் முதலமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளதால் அவரால் நாளை நடக்கும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மனநல சிகிச்சையிலிருந்து திருமணம்வரை - கீழ்பாக்கத்தில் ஒரு காதல் கதை


மேலும் படிக்க | பரிசோதனை முடிந்தது... வீடு திரும்பினார் முதலமைச்சர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ