காவிரி தான் எங்களுக்கு வாழ்வுரிமை; தமிழ்நாட்டிற் முழு உரிமை உள்ளது: முதல்வர்
`நாம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்து தான் இருக்கும். தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். காவிரியில் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்,, "நாம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்து தான் இருக்கும். தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். காவிரியில் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை உள்ளது.
ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால், நமது விவசாயிகள் மோசமாக பாதிப்படைவார்கள்.
வழக்கமான காலத்தில் கூட நமக்கு தரவேண்டிய நீரை கர்நாடகா தருவதில்லை.
கர்நாடகாவை விட தமிழகத்தில் தான் காவிரி நதி அதிகமாக பாய்கிறது.
ALSO READ | மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை : TN Govt
முன்னதாக மேகதாது அணை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா (B S Yediyurappa) கூறியிருந்தார். இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அரசு அழைப்பு விடுத்தது.
அதேபோல மேகதாதுவில் அணை கட்ட ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் அனுப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை டெல்லியில் சந்தித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR