Cancel NEET: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, கடந்த 5 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் (NEET Exam) தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin) நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.
ALSO READ | தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இந்நிலையில், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,
தமிழகத்தில் நீட் (NEET) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் உகந்ததாக இருக்காது, மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. மாணவர்களின் உடல் நலன், மன நலம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. பெற்றோர்கள், மருத்துவர்கள், 13 கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவுபடுத்த பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR