கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க நவம்பர் 22 இல் முதல்வர் டெல்லி பயணம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் பழனிசாமி, ஆய்வை முடித்த பின் புயல் சேத விவரங்களோடு வரும் 22ம் தேதி வியாழனன்று டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிவாரணத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழகத்தில் கஜா புயலால், திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி மக்கள் குடிநீர், பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில் கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு வருகிறார். மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்கள் வழப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆய்வை முடித்த பின் புயல் சேத விவரங்களோடு வரும் 22 ஆம் தேதி வியாழனன்று டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிவாரணத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.