அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்த பேரவையில் தீர்மானம்!!
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் பழனிசாமி!!
12:58 | 26-06-2018
8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த அதிக இழப்பீடு வழங்கப்படும்; தர்மபுரியில் 90% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தரமான சாலை அமைக்கவேண்டிய அவசியம் தமிழகத்தில் உள்ளது என பேரவையில் முதல்வர் பழனிசாமி உரை!
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் பழனிசாமி!!
தமிழக சட்டசபை 10 நாள் விடுமுறைக்குப்பின் நேற்று மீண்டும் தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, பேரவையில் இன்று ஒருமித்த கருத்து ஏற்படும்வரை மசோதாவை நிறைவேற்றும் பணிகளை நிறுத்த வேண்டும். மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் பழனிசாமி.
நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மத்திய அரசு 2016-ல் 'அணை பாதுகாப்பு மசோதா-விற்கான அம்சங்களை பட்டியலிட்டது. இதன்படி, மாநிலங்களில் உள்ள அணைகளை அந்தந்த மாநில அரசே ஒரு குழு அமைத்து அவற்றை பராமரித்துக் கொள்வதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த மசோதாவில் தமிழக நலனுக்கு எதிராக சில அம்சங்கள் உள்ளன, எனவே அவற்றை நீக்க வேண்டும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து கடந்த ஜூன் 13-ல் இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுள்ளது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கைப்படி எந்தவித திருத்தமும் செய்யப்படவில்லை. இதையடுத்து, அணை பாதுகாப்பு மசோதாவை மறுபரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டும் என கடந்த ஜூன் 16-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, இன்று தமிழக சட்டபேரவையில், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் பழனிசாமி.