முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா வரும் ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் விழாவில் காமராஜரை பற்றியும் அம்பேத்கரை பற்றியும் பெரியாரை பற்றியும் படியுங்கள் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.  இதில், 1600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழா, பல அரசியல் பிரமுகர்களால் விமர்சிக்கப்பட்டாலும் மக்களிடையே விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது எனலாம். இதையடுத்து, நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 11) சந்தித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | "மகள் மரணத்துக்கு நீதி வேண்டும்" ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!



இந்த நிலையில் ஏற்கனவே அம்பேத்கர் பிறந்த நாளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அரசியல் வசனங்கள் இடபெற்றிருந்தது. தற்போது காமராஜர் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 


கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை ஒட்டி நாளை முதல் இரவு நேர பயிலகம் உள்ளிட்டவைகளையும் திறக்க நடிகர் விஜய் ஏற்பாடு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அன்று‌ மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம்‌, பேனா, பென்சில்‌ வழங்குதல்‌ போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால்‌ இயன்ற அளவில்‌ செய்து சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும்‌ தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரை போற்றும்‌ வகையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து தொகுதிகளிலும்‌ 'தளபதி விஜய்‌ பயிலகம்' ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை அறிவித்துள்ளனர். 



232 சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை பணிகளை தொடங்கி இருப்பதாகவே அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவை ஒட்டி நெல்லை மாநகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் பாளையங்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அதிர வைக்கும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் வழியில் நாளைய தலைமுறையை வழிநடத்தும் நாளைய முதல்வரே என குறிப்பிட்டு சட்டமன்ற முகப்பு படத்துடன் கூசிய போஸ்டருடன் நடிகர் விஜயை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை: கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ