தளபதி விஜய்யை இயக்கும் மிஷ்கின்! வெளியான சுவாரஸ்ய தகவல்!

மிஷ்கின் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்தவர், தற்போது நடிகராகவும், இசையமைப்பாளராகவும் மாறி உள்ளார்.

 

1 /5

மிஷ்கினின் அடுத்த இயக்கமான 'பிசாசு 2' ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'லியோ' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  

2 /5

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தளபதி விஜய்யை இயக்குவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த மிஷ்கின் "எனது முதல் படமான சித்திரம் பேசுதடியை விஜய்க்காக எழுதினேன், என்றும் ஆனால் என்னால் அதை அவருடன் செய்ய முடியவில்லை. என்றும் கூறினார். மேலும், கண்டிப்பாக ஒரு கட்டத்தில் விஜய்யுடன் ஒரு படம் செய்வேன். " என்று அவர் தெரிவித்துள்ளார்.  

3 /5

விஜய்யை வைத்து ஒரு படம் எடுத்தால் அது கண்டிப்பாக சர்வதேச படமாக இருக்கும். ஹாலிவுட் தரத்தில் ஸ்பை த்ரில்லர் அல்லது ஆக்ஷன்-அட்வென்ச்சர் படம் எடுக்க விரும்புகிறேன்.   

4 /5

ஏனெனில் விஜய் ஆக்ஷனில் மிகவும் வலிமையானவர் என்று தெரிவித்த மிஸ்கின் அந்த படத்தை லாஸ் ஏஞ்சல்ஸில் நான் திரையிடுவேன் என்றும் கூறியுள்ளார்.   

5 /5

2002ல் விஜய் நடித்த ‘யூத்’ படத்தில் மிஷ்கின் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களின் ஜோடிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.