புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வரும் டிசம்பர் 4 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பினை பினவாங்க வேண்டும், போராட்டத்தை கைவிட்டு புயல் சீரமைப்பு பணிக்கு உதவ வேண்டுமென தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முன்னதாக சென்னை கீழ்பாக்கத்தில் கடந்த நவம்பர் 25-ஆம் நாள் நடைப்பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பான வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.


தமிழக அரசு அலோசனைக்கு அழைப்பு விடுத்தால் போராட்ட கைவிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 29-ஆம் நாள் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்து அழைப்பு விடுத்தது. அழைப்பினை ஏற்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கல்ந்துக்கொண்டனர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக தெரிகிறது.


இந்நிலையில் இன்று காலை ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மாயவன், திட்டமிட்டப்படி வரும் டிசம்பர் 4-ஆம் நாள் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தினை கைவிட வேண்டுமென தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.