கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18 ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் அவரது வயிறு மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?


இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் மீட்டு கோவில் நிர்வாகத்திற்கும், வனத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் சுமை தூக்கும் பணியாளர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூகம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீரகுமார், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் உடற் கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சித்ரா பவுர்ணமி: பக்தர்களை கண்காணிக்க வனத்துறை தீவிரம்!


வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான இன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க உள்ளனர். ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி, ஈசனை வழிபடுவது வழக்கம். இந்தாண்டும், நேற்று இரவு முதலே பக்தர்கள், மலை ஏற வந்தனர். சித்ரா பவுர்ணமியையொட்டி, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை, கிரி மலையில் உள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டி வழிபடுவார்கள். சித்ரா பவுர்ணமியையொட்டி, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து சுவாமியை தரிசித்து செல்லுவர்கள். 


ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வனத்துறை சோதனைச் சாவடி அருகே பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பார்க்கிங் பகுதியில் இருந்து கோவில் அடிவாரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டுகிறது.  இந்நிலையில் கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி, வனசரகம், பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை ட்ரோன் மூலம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீ போன்ற நிகழ்வு ஏற்படாத வண்ணம் வனத்துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ