சென்னை: சீனாவில் ஆரம்பித்த COVID19 தாக்கம், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. அதுவும் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுக்கள் இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனோ தொற்றுநோய் (Croronavirus Pandemic) காரணமாக இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை நாட்டில் (Coronavirus In Indian) 76 பேருக்கு கொரோனோ (Coronavirus) பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் (Coronavirus In Madhya Pradesh)  பள்ளிகள் காலவரம்பின்றி மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல உத்தரபிரதேசத்தில் (Coronavirus In Uttar Pradesh) உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 22 வரை மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 


 



ஏற்கனவே தேசிய தலைநகரம் டெல்லியில் (Coronavirus In Delhi)பள்ளிகள் மூட ஆம் ஆத்மி தலைமையிலான அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


அதேபோல கேரளாவிலும் (Coronavirus In Kerala)  அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் சினிமா ஹால், மக்கள் அதிகம் கூடும் ஷோபிங் மால் உட்பட மூட உத்தரவிட்டுள்ளது.


அண்டை மாநிலமான கர்நாடகாவில் மாநிலத்தில் உள்ள அனைத்து மால்கள், சினிமா அரங்குகள், விடுதிகள், திருமண விழாக்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் கூடும் இடங்கள் என அனைத்தும் ஒரு வாரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன என கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


 



Croronavirus Pandemic  கருத்தில் கொண்டு பீகார் அரசும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடப்படும். அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை மதிய உணவுக்கான பணத்தை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


 



மாநிலத்தில் அனைத்து பொது நூலகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், நகர்ப்புறங்களில் உள்ள நீர் பூங்காக்கள் மற்றும் அங்கன்வாடிஸ் ஆகியவை மார்ச் 31 வரை மூடப்படும் என சத்தீஸ்கர் அரசு (Coronavirus In Chhattisgarh) அறிவித்துள்ளது.


 



முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 2020 மார்ச் 31 வரை மூடப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது என ஹரியானாவின் (Coronavirus In Haryana) உயர்கல்வி இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.


 



தமிழகத்தை பொறுத்த வரை இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் COVID19 பரவாமல் இருக்க எடப்பாடி தலைமையிலான அரசு முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.