தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் EPS!
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..!
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..!
இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு (Polio Drops) மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் (TN Govt Hospital), ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதேபோல் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரெயில் மற்றும் விமான நிலையங்கள் (Airports), சோதனைச்சாவடிகளிலும், போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) தொடங்கி வைத்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை (Polio Drops) முதலமைச்சர் வழங்கினார். சொட்டு மருந்து வழங்கிய பின் குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசாக முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
ALSO READ | அன்னையான முன்னாள் முதலமைச்சர் AMMA, ஜெயலலிதா ஆலயம் வழிப்பாட்டிற்காக திறப்பு
இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள் (Health workers), அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு தனியார் மருத்துவமனைகள் (Private hospitals) மற்றும் டாக்டர்களுக்கும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிக்காக சுமார் 6,700 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளானர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR