2020 ஆம் ஆண்டிற்கான பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று தொடங்கி வைத்துள்ளார்.  இதுகுறித்த அறிவிப்பில், உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்கிச் சென்ற பொதுமக்கள்!


இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள்தூள், மிளகாள்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.


அதன்படி கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழகத்தில் வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு பரிசினை வழங்கினார்கள்.  இச்சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற அரிசி குடும்ப அட்டைதாரர்கள்  எண்ணிக்கையில் நியாய விலைக்கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தடுக்கவும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற எதுவாகவும், பொங்கல் பரிசுத்தொகுப்பினை அரிசி அட்டைதாரர்களுக்கு விநியோகித்திட நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.



அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ள வேண்டும்.   இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி, மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முனைவர் இறையன்பு, இ.ஆ.ப. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.முகமது நஜிமுதீன், இ.ஆ.ப உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் திரு.வே.ராஜராமன், இ.ஆ.ப. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் மருத்துவர் சூ.பிரபாகர், இ.ஆ.ப. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. ஆர்.சண்முகசுந்தரம், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


ALSO READ | கொரோனாவை குணமாக்கும் Molnupiravir மாத்திரைக்கு அங்கீகாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR