தமிழக ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது
21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தைப்பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.
அந்த தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாள்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் வழங்கப்படுகிறது.
இதற்காக ரூ.1,296.88 கோடி செலவில் 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது
பச்சரிசி - 1 கிலோ, வெல்லம் - 1 கிலோ, முழு கரும்பு - 1, முந்திரி-50, திராட்சை-50, ஏலக்காய்-10 கிராம், பாசிப்பருப்பு-1/2 கிலோ, நெய்-100, கடுகு-100 கிராம், மஞ்சள்தூள்-100 கிராம், மிளகாய்தூள்-100 கிராம், மல்லித்தூள்-100 கிராம், சீரகம்-100 கிராம், மிளகு-50 கிராம், புளி-200 கிராம், கடலைப்பருப்பு-1/4 கிலோ, உளுத்தம்பருப்பு-1/2 கிலோ, ரவை-1 கிலோ, கோதுமை மாவு - 1 கிலோ, கைப்பை 1, உப்பு-1/2 கிலோ என 21 பொருட்கள் வழங்கப்பட்டது.
குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியுடன் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.