காலை உணவு திட்டத்துடன் கழிவறையை ஒப்பிட்ட பிரபல நாளிதழ்..! கண்டனம் தெரிவித்த முதல்வர்..!
தமிழக அரசு கொண்டு வந்த காலை உணவு திட்டம் குறித்து ஒரு பிரபல நாளிதழ் வைத்திருந்த தலைப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டம்: தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்படது. கடந்த ஆண்டு இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக சில மாநகராட்சிகளும், நகராட்சிகளுலும் கிராமங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
நாளிதழ் வெளியிட்ட சர்ச்சை தலைப்பு..!
தமிழகத்தில் மக்கள் அதிகம் வாசிக்கும் பிரபல நாளிதழ்களுள் ஒன்று தினமலர். இந்த நாளிதழில், இன்று ‘காலை உணவு திட்டம்’ குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இதில், “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பின் செய்தியில், மாணவர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்படுவதாகவும், வீட்டில் ஏற்கனவே சாப்பிட்டு வந்த மாணவர்களும் பள்ளியில் சாப்பிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் இயற்கை உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | "பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!
ஸ்டாலின் கடும் கண்டனம்…!
தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளிதழின் இந்த செய்தியை புகைப்படம் எடுத்து தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின், தனது பதிவில், “உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என்றும் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!
தினமலர் நாளிதழ் மேற்கூறியவாறு செய்தி வெளியிட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர், “காலை உணவு திட்டம் குறித்த செய்தியை சேகரிக்க அனைவரும் உணவு கூடத்தற்கு செல்ல, ஒருவன் மட்டும் கழிவறைக்கு செல்கிறான்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால், #தினமலம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் படிக்க | I.N.D.I.A. கூட்டணி: நான்காவது கூட்டம் தமிழ்நாட்டிலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ