MK Stalin About Vijayakanth In Tamil: மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக்கத்தின் நிறுவனத் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 'புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்', 'நிறுவனத் தலைவர் - தேமுதிக' என பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப்பேழையில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு தேமுதிக அலுவலக வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இறுதி மரியாதை நிகழ்வின் போது முதலமைச்சர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மலர்வளையம் வைத்து தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.



விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் தமிழிசை ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது X பக்கத்தில் விஜயகாந்த் மறைவு குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,"எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே..." என உருக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 



விஜயகாந்தின் உடல் நல்லடக்கத்திற்கு பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அதில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், காவல்துறையினருக்கு ராயல் சல்யூட் அளிப்பதாக கூறினார். 15 லட்சம் பேர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாகவும் கூறினார். 


முன்னதாக நேற்று காலை விஜயகாந்த் காலமானார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மாலை 5.40 மணியளவில் உடல் தேமுதிக அலுவலகம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ