நீட் தேர்வை நிறுத்த முதல்வர் முயற்சி செய்து வருகிறார் - கனிமொழி எம்பி பேட்டி
தூத்துக்குடி நீட் தேர்வு மையத்தில் நடந்த குளறுபடி பிரச்சனைக்கு ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் - கனிமொழி எம்பி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தேர்வு நிறுத்தப்பட வேண்டும், அதற்கான முயற்சிகளை முதல்வர் செய்து வருகிறார் என்று கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி நீட் தேர்வு மையத்தில் நடந்த குளறுபடி குறித்து முதல்வர் அலுவலகத்திற்க்கு எடுத்துச் சொல்லி உள்ளோம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. முற்றிலுமாக நீட் தேர்வு நிறுத்தப்பட வேண்டும், அதற்கான முயற்சிகளை முதல்வர் செய்து வருகிறார். தூத்துக்குடி நீட் தேர்வு மையத்தில் நடந்த குளறுபடி பிரச்சனைக்கு ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு மறுபடியும் பரிசீலனை செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்து வெற்றி பெற்றார். இந்த அமோக வெற்றியை தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள கலைஞர அரங்கம் முன்பாக உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலை முன்பு வைக்கப்பட்ட அவரின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்திய கனிமொழி கருணாநிதி தொடர்ந்து தூத்துக்குடி நகரில் உள்ள எட்டையாபுரம் சாலை செல்வநாயகபுரம் கந்தசாமிபுரம் வட்டக்கோயில் கிருஷ்ணராஜபுரம் திரேஸ்புரம் தேரடி அண்ணா நகர், சிவன் கோவில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் சென்ற கனிமொழி கருணாநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடிக்கும் மலர்களை தூவியும் மாலை அணிவித்தும் வரவேற்பு தெரிவித்தனர்.
அப்போது பேசிய கனிமொழி கருணாநிதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சியின் மீது வைத்திருக்கக்கூடிய பற்றறின் காரணமாகவும், திமுக மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவும் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தொடர்ந்து தூத்துக்குடியின் முன்னேற்றத்திற்காக பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டு வரவும் வேலை வாய்ப்பை உருவாக்கவும் பாடுபடுவேன் என உறுதி அளித்தார். இந்த நன்றி அறிவிப்பு பயணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ