முதல்வர் முக ஸ்டாலினின் உரை ஹிந்தியில் : கிளம்பிய எதிர்ப்புகள்
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் உரையை தமிழக அரசின் செய்தித் துறை ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது
இந்தி எதிர்ப்பிற்கு பெயர் போனது தமிழ்நாடு. சுதந்திரத்திற்கு பின் நாடு முழுவதும் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு விதை போட்டது தமிழ்நாடுதான். அதற்கு அச்சாணியாக இருந்தது முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம். கலைஞர் கருணாநிதி ரயில் தண்டாவளத்தில் தலைவைத்து படுத்து புகழ்பெற்றதும் அதே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தான்.
அந்த நிலை மாறாமல் இப்போது வரை தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தியபோது தமிழ்நாடு இருமொழிக் கொள்கையிலேயே நீடிக்கும் என அரசு முடிவெடுத்தது.
மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேர்வுத்துறை
எப்போதுமே இந்தி மொழி எங்களுக்கு தேவையில்லை. தாய் மொழியாக தமிழ் மொழியும் இணைப்பு மொழியாக ஆங்கிலமுமே போதும் என்ற கொள்கையை பின்பற்றி வரும் அரசு, தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலினின் உரையை ஹிந்தியில் சப்டைட்டிலுடன் வெளியிட்டுள்ளது. இந்த சப்டைட்டில்கள் யாருக்கு என்ற கேள்வி ட்விட்டரில் எழுந்து வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். வழக்கமாக அரசு விழாக்களை அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் விடியோவாக எடுத்து வெளியிடுவார்கள். ஆனால் இந்தமுறை முதல்வரின் பேச்சு ஹிந்தியில் சப்டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ட்விட்டரில் ஹிந்தி மொழிபெயர்ப்பு தேவைதானா என்று கேள்வி எழுந்துவருகிறது.
மேலும் படிக்க | உலகிலேயே அதிக உயரம் கொண்ட முத்துமலை முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR