அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்- ஓ.பி.எஸ் அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டியையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , " பொங்கல் பண்டிகையை முன்னீட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு போன்ஸ் அளிக்கப்படும். ஏ,பி தொகுதிகளை சார்த்த ஊழியர்களுக்கு ரூ.1000 போனஸ் வழங்கப்படும்.
சி,டி தொகுதிகளை சார்த்த ஊழியர்களுக்கு ரூ.3000மும் , ஓய்வுதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வுதியதாரர்களுக்கு ரூ.500-ம் போனஸாக வழங்கப்படும். மேலும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.