முதல்வர் ஸ்டாலின் அதிரடி... அண்ணாமலை மீது அவதூறு வழக்கு!
CM Stalin Defamation Case Against Annamalai: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
CM Stalin Defamation Case Against Annamalai: சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
அண்ணாமலை எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து கருத்துக்கள், பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்திவரும், முதலமைச்சருக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில், இரண்டு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
எனவே பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை எட்டு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் ஆகியோரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தி. நகரில் உள்ள கமலாயத்தில் கடந்த ஏப். 14ஆம் தேதி வெளியிட்டார். நீண்ட நாள்களாக இதுகுறித்து பேசி வந்த அண்ணாமலை, சொத்துப் பட்டியலின் முதல் பாகத்தை அன்று வெளியிட்டார்.
இரண்டாம் பாகத்தில் இன்னும் பல தலைவர்கள், திமுக அல்லாத பிற கட்சியினர் ஆகியோரின் சொத்துப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், அவரின் ரஃபேல் வாட்ச்சின் பில்லையும் அவர் வெளியிட்டார். அதாவது, தன்னை எளிமையான மனிதர் என கூறிக்கொள்ளும் ஒருவரால் எப்படி விலை மதிப்பான வாட்ச்சை வாங்க முடியும் என திமுகவினர் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு அண்ணாமலை இந்த ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட்டார்.
தனக்கு மாதம் ரூ. 5 - 7 லட்சம் வரை செலவு உள்ளதாகவும், அதனை தனது நண்பர்கள் தான் கொடுத்து வருவதாகவும் கூறினார். மேலும், அந்த ரஃபேல் வாட்ச்சை கோவை சேரலாதன் என்ற தனது நண்பரிடம் இருந்து ரூ. 3 லட்சம் பணம் செலுத்தி வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை வெளியிட்ட பில், கோவை சேரலாதன் உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக இல்லை என்றும், இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் பெயர் குறிப்பிட்ட திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்பட பலரும் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக கூறிவந்தனர். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: நாசர் நீக்கம்! டிஆர்பி ராஜாவுக்கு பதவி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ