கோவை: உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு முதல் மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கும் கோர வைரஸ் கொரோனாவினால் கோடிக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, முன்னெப்போதையும் விட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் சேவை மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. 


இந்த நிலையில் மே 12ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச உலக செவிலியர் தினம் கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு செவிலியர் தினத்தை கொண்டாடும்போது, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை (Coimbatore ESI Hospital) டீன், செவிலியர் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.


Also Read | செவிலியர்களுக்கு International Nurses Day வாழ்த்துக்கள்


கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டபோது ஏராளமான செவிலியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது டீன் ரவீந்திரன், திடீரென்று கொரோனா சிகிச்சைப்பிரிவில் பணி்புரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்தார்.


செவிலியர்களாகிய நீங்களே தற்போதைய சூழலில் கடவுள் என கூறி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மருத்துமனை டீனின் இந்த செய்கை அங்கு கூடியிருந்த செவிலியர்களை நெகிழச் செய்தது. 


2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவுகள் சுகாதார பணியாளர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில், உலகம் 160 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் வழக்குகளையும், உலகளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் கண்டது. 


Also Read | புதுச்சேரி: 3 பாஜக நியமன MLA பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம்


2021 இன் சர்வதேச செவிலியர்கள் தினத்தின் கருப்பொருள்: வழிநடத்த ஒரு குரல் - எதிர்கால சுகாதாரத்துக்கான பார்வை (A Voice to Lead - A vision for future healthcare).


நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12ஆம் நாள் சர்வதேச செவிலியர் தினமாக (International Nurses Day) கொண்டாடலாம் என 1974 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.


சர்வதேச செவிலியர் கவுன்சில் (International Council of Nurses) 1965 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்த நாளைக் கொண்டாடியது. 


Also Read | சென்னையில் இன்று பெட்ரோல் விலை என்ன? 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR