Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்

கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல என்றாலும், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2021, 07:49 AM IST
  • தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்
  • கொரோனா தடுப்பூசி சூத்திரத்தை பகிரங்கப்படுத்தவேண்டும்
  • இது, அறிவுசார் சொத்துரிமை பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்

புதுடெல்லி: கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல என்றாலும், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

கொரோனாவின் பாதிப்பு ஒரு பக்கம் என்றால், அது தொடர்பாக அதிகாரிகளும், பிரபலங்களும், எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் கூறும் கருத்துகளும், பரிந்துரைகளும் சில சமயங்களில் வேடிக்கை விநோதங்களாக மாறி விடுகின்றன. இதற்காக அவர்கள் நையாண்டி செய்யப்படுகின்றனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி கரக்பூரில் படித்த இயந்திர பொறியியல் பட்டதாரி. அவருடைய அனுபவம் மற்றும் அறிவுக்காக அறியப்படுபவர் கெஜ்ரிவால்.

Also Read | தமிழகத்தில் இன்று முதல் மே 15 வரை பரவலாக மழை பெய்யலாம்

ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிந்துரைத்திருப்பது இணையத்தை பிளவுபடுத்தியுள்ளது. இரண்டு உற்பத்தியாளர்களின் COVID-19 எதிர்ப்பு தடுப்பூசி சூத்திரத்தை (vaccine formula) நாட்டின் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமையன்று கெஜ்ரிவால் கூறியது பல்வேறு விதமான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

“இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. அவர்கள் மாதம் ஆறு முதல் ஏழு கோடி வரை உற்பத்தி செய்கிறார்கள். இந்த கணக்கின்படி பார்த்தால், நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்குள் கொரோனாவின் பல அலைகள் வந்து மக்களை பாதிக்கும். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் ஒரு தேசிய திட்டத்தை உருவாக்குவது முக்கியம்”என்று கெஜ்ரிவால் கூறினார். 

இது, அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆச்சரியப்பட வைத்தது. அறிவுசார் சொத்துரிமை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு படைப்பாளியின் / படைப்பைப் பயன்படுத்துவதற்கான பிரத்யேக உரிமையை வழங்குகின்றன.

இந்த நிலையில் டெல்லி முதலமைச்சரின் பரிந்துரைக்கு ட்விட்டர் பயனர்கள் ட்ரோல் செய்கின்றனர்.  கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்களும் அதற்கு எதிர்வினைகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றான. அவரது ஆலோசனையின் பின்னர், #IITian என்ற ஹேஷ்டேக் வைரலாகிறது. 

ஐ.ஐ.டி கரக்பூரில் இருந்து இயந்திர பொறியியல் பட்டம் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய கருத்துக்கு ஆதரவும் இருக்கிறது.

 “ஸ்ரீமன் அர்விந்த்கேஜ்ரிவால் ஐ.ஐ.டி கரக்பூர் இந்தியாவிற்கு அளித்த பரிசு என்பதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். இதுபோன்ற திகைப்பூட்டும் புத்திசாலித்தனம் ஒரு ஐ.ஐ.டி மாணவரின் மனதில் தோன்றுமா? ”என்று மூத்த பத்திரிகையாளர் காஞ்சன் குப்தா ட்விட்டரில் நையாண்டி செய்துள்ளார்.

Also Read | MDMK: ஏழு தமிழர்களை விடுதலை செய்க! வைகோ வேண்டுகோள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News