அரசு வங்கி, மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்த நகையை மீட்க கடன் வழங்குவது அடகு கடைக்காரர்களின் வழக்கம். நம்பிக்கை அடிப்படையில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இவ்வாறு கடன் வழங்கினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அடகு கடைக்காரர்கள் பலர், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு கூட தாராளமாகக் கடன் வழங்குகின்றனர். இப்படி கடன் வழங்கும் அடகு கடைக்காரர்களைக் குறி வைத்து ஏமாற்றியிருக்கிறார், மோசடி பேர்வழி ஒருவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கோவை மாவட்டத்தில் அடகு கடை வைத்து நடத்தி வருபவர் மணிகண்டன். தனது அடகு கடையில் மணிகண்டன் என்பவருக்கு 3 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்ததாகவும்; பணத்தை வாங்கிய பின் அவர் முகவரி இல்லாத மோசடி மன்னன் என்பதும் தெரியவந்தது. உடனே மணிகண்டன் என்பவர் மீது போலீசில் புகாரளித்திருக்கிறார். வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. சாதாரண மோசடி என்றே முதலில் எண்ணினார்கள். ஆனால் அடுத்தடுத்து மணிகண்டன் என்ற பெயரை வைத்து 7 லட்சத்திற்கும் மேல் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததாக பல பேர் போலீசில் புகாரளித்திருக்கிறார்கள். மிரண்டு போன போலீசாருக்கு அப்போதுதான் தெரியவந்தது பயங்கர மோசடி மன்னனைத் தேடி வருகிறோம் என்று. 


தங்கம் அடகு, விற்பனை கடை என்று விளம்பரம் தென்பட்டால் போதும், அதிலுள்ள அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு ‘வங்கியில் நகை கடனுக்காக அடகு வைத்திருக்கின்றேன் ; நீங்கள் பணம் கொடுத்தால் எடுத்து வந்து உங்களிடம் அடகு வைப்பேன்’என்று பொய்யான உறுதி கூறுவதும் ; பணம் வாங்கிக்கொள்வது, முடிந்தால் விற்று தாருங்கள் என்று தெரிவித்து லட்சக்கணக்கில் பணம் பறித்து பின்னர் தலைமறைவாகி விடுவதும் அந்த மோசடி நபரின் வழக்கம். 



நகை அடகு வைத்தற்கான வங்கி ரசிதையும், வசிப்பிடத்துக்கான விலாசத்தையும் நகை கடைக்காரர்களிடம் கொடுத்து நம்ப வைக்க, போலியான வங்கி ஆவணம், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அச்சு அசலாக தயார் செய்து வைத்திருக்கிறார். யாரும் சந்தேகப்படும்படி நடந்து கொள்ளாமல் இருக்க நகையின் அன்றாட மதிப்பினை அறிந்து அதற்கு ஏற்றவாறு நகை அடகு ரசீதை போலியாக தயார் செய்வதில் கில்லாடி என்றே சொல்லலாம். 


இப்படியொரு கில்லாடியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைக்க தொடங்கினர். கோவை மாவட்ட உதவி கமிஷனர் மணிகண்டன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.


தனிப்படை போலீசின் தேடுதல் வேட்டையில் பதுங்கியிருந்த மோசடி மன்னன் வசமாக பிடிபட்டான். விசாரணையில் அவரின் உண்மையான பெயர் தீபன் என்பதும் , கிண்டி பல்கலைக்கழகத்தில் படித்த பிடெக் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. சிவகாசியில் பட்டாசு ஆலை நடத்தி தொழில் நட்டமான நிலையில் நவீன வழிப்பறியில் இறங்கியிருக்கிறார். 


மேலும் படிக்க | மறுமணத்திற்கு பெண் தேடும் ஆண்கள் - 'அம்பு விட்டு வம்பு செய்யும் ஆந்திர பெண்'


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டியதால் தீபன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போலீசில் பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தன. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபனை கோவை மத்தியில் சிறையில் அடைத்தனர். 


மேலும் படிக்க | ரூ.25,000 மதிப்புள்ள போன் வெறும் ரூ.2500! செல்போனில் இனிக்க இனிக்க ஆப்பு வைத்த பெண்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR