கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சாதனை: கையை ஒட்ட வைத்த சிக்கலான அறுவை சிகிச்சை
கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து பல சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர். துண்டிக்கப்பட்ட கையை ஒட்டவைத்து தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
கோவை: கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து பல சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர். துண்டிக்கப்பட்ட கையை ஒட்டவைத்து தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
குடும்பத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். உடனடியாக செயல்பட்ட மருத்துவர்கள், சாதனை பதிவு செய்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து கையை ஒட்டவைத்து மருத்துவர்கள் (Doctors)சாதனை செய்துள்ளனர்.
ஒரிசா மாநில இளைஞரான 21 வயது கணேஷ் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். குடும்பப்பிரச்சனையால் அவரது கை வெட்டப்பட்டது. கடந்த 8ஆம் தேதியன்று வாய்த்தகராறு கைகலப்பாக முற்ற கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
குடும்பத்தகராறு காரணமாக நடந்த பிரச்சினையில், கணேஷின் உறவினர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டார். கணேஷின் முதுகு, கழுத்து என பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததோடு வலது கை துண்டாக வெட்டப்பட்டது.
கோபத்தில் வந்த சண்டையால் ஏற்பட்ட விபரீதத்தை அடுத்து, உறவினர்கள் கணேஷின் துண்டான கைவிரல்களை ஈர துணி சுற்றி ஐஸ்கட்டி பெட்டியில் வைத்து பத்திரமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கணேஷ் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: பன்றியின் இதயத்தை மனித உடலில் வைத்து அறுவை சிகிச்சை
நிலைமையை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள், மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு துண்டான கையை உடலுடன் இணைத்தனர்.
அப்போது எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களும் இணைக்கப்பட்டன. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு கடந்த 20 நாட்களாக மருத்துவர்களின் மேற்பார்வையில் இருந்தார் கணேஷ்.
தற்போது வெட்டுப்பட்ட கணேஷின் கை, உடலோடு இணைந்துவிட்டது, மேலும் அவர் துரிதமாக குணமாகி வருகிறார்.
அபாரமாக செயல்பட்டு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த அரசு மருத்துவ குழுவினருக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க | தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜான் அமலன் தேர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR