கோயம்புத்தூர்: கோவை நகரின் பண்பையும், உறுதியையும், உத்வேகத்தையும் கொண்டாடும் கோயம்புத்தூர் விழா, சனிக்கிழமை (ஜனவரி 2) தொடங்குகிறது. இது வருடாவருடம் நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த விழாவில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவில், COVID-19 வீரர்களுக்காக மலர்கள் மழையாக பொழியப்படும். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்த நிகழ்வு இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 முன்னணி வீரர்களுக்கு (Frontline Warriors) நாம் காட்டும் நன்றிக்கடனின் அடையாளமாக ஹெலிகாப்டர்கள் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (CMCH) ஆகியவற்றில் மலர்களை பொழியும். மேலும், கோயம்புத்தூரின் அழகை மேலிருந்து காணும் வகையில் ஹெலிகாப்டர் ரைடுகளுக்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.


யங்க் இந்தியன்ஸ் (YI) என்ற அமைப்பு நடத்தும் இந்த விழாவின் 13 ஆவது பதிப்பு ஜனவரி 10 ஆம் தேதி வரை வர்சுவலாக நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஒன்பது நாட்களில் 100 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் கோயம்புத்தூரின் வலிமை, தனித்துவம் மற்றும் கலாச்சாச்சாரத்தைக் (Culture) கொண்டாடும் வகையிலும், இன்றைய நிலையை எடுத்துக்காட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


விழா ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, #CelebrateCoimbatore மற்றும் #CoimbatoreVizha ஆகிய ஹேஷ்டேகுகள் மக்களிடையிலும் இணையத்திலும் பரப்பப்பட்டன.


ALSO READ: இனி சென்னையை சுற்றி வரும் கில்லி சாய்: ஆட்டோக்களில் வரும் Tea and Snacks!!


தொடக்க விழாவில் உள்ளூர் நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதார அமைச்சர் சி விஜய பாஸ்கர் (C Vijayabaskar) ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொழுதுபோக்கு, பயணம், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் தவிர கலை, கலாச்சாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான அற்புதமான நிகழ்வுகளுடன் விழா மக்களைக் கவரும் வகையில் அமையும் என்று நம்பப்படுகின்றது.


இந்த விழாவின் ஒரு அங்கமாக மாரத்தான் நிகழ்வும் நடக்கவுள்ளது. எனினும், இதில் ஒரு வித்தியாசமும் உள்ளது. இதில் கலந்துகொள்ளும் அனைவரும், ஒரு குறிப்பிட்ட தூரத்தை தங்கள் வசதிக்கேற்ப எவ்வளவு நேரத்தில் வேண்டுமானாலும் ஓடி முடித்து, அதை இதற்காக வடிவமைகப்பட்டுள்ள ஒரு செயலியில் பதிவிட வேண்டும். இதன் அடிப்படையில் பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


‘Gift a Device’ அதாவது, 'ஒரு சாதனத்தை பரிசளிக்கவும்' என்ற ஒரு நிகழ்வும் இந்த விழாவில் உள்ளது. இதில், மக்கள் தாங்கள் பயன்படுத்தாத தொலைபேசிகளையும் மடிக்கணினிகளையும் ஏழை மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு உதவலாம். 


ALSO READ: Corona Vaccine ஒத்திகை தமிழகத்தில் இன்று தொடங்கியது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR