தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் சிவக்குமார்  சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் முப்படை தளபதி பிபிவி ராவத் அவர்கள் நீலகிரி ஹெலிகாப்டர் உயிரிழந்த விவகாரம் நாட்டையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் யூடியூபர் மாரிதாஸ் அவர்கள், காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை வெளியிட்டிருந்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விவகாரத்தில் மதுரை போலீசார் யூடியூபர் மாரிதாஸை கைது செய்தனர். மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் டிசம்பர் 10-ம் தேதி திநகரில் உள்ள கமலாலாயத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை, சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி. அதனால் இங்கு ஆட்சி நடத்துவது வேறு யாரோ. நேர்மையான டிஜிபியாக இருந்தால் பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக காவல்துறை one of the worst performing police ஆக உள்ளது. காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். என கூறியுள்ளார். 


ALSO READ |  'பொறுமையை சோதிக்காதீங்க' தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆவேசம்


ஒரு ஐபிஎஸ், அதிகாரியாக இருந்த அண்ணாமலை அவர்கள், எப்படி அவதூறு கருத்துக்களை பரப்பும் நபருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்று தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தை சீர்குலைக்க நினைக்கும் மாரிதாஸ் போன்றவர்களை அண்ணாமலை அவர்கள் ஆதரிப்பது வேடிக்கையின் உச்சமாக உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக காவல்துறை மிரட்டும் தோனியில் அண்ணாமலை அவர்கள் பேசுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. 


அண்ணாமலை போன்று அனைவரும் பேச தொடங்கினால், தமிழகம் எனும் அமைதி பூங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் அமைந்து விடும். ஆகவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் அண்ணாமலை மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.


ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR