திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்

உளுந்தூர்பேட்டை அருகே விஏஓ திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி இளம்பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 11:16 AM IST
திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்  title=

உளுந்தூர்பேட்டையை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நன்னாவரம் கிராமநிர்வாக அலுவலராக வருவாய் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மூன்றாண்டுகளாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், ராம்குமாரின் பெற்றோர், அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

ALSO READ | சட்டை இறுக்கமாக அணிந்ததற்காக அடித்த ஆசிரியர் - மருத்துவமனையில் மாணவன்

இதனால், திருமணம் செய்த ஈஸ்வரியை, தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் வரை அவரது வீட்டில் இருக்குமாறு சமாதானம் செய்துவைத்து ராம்குமார் அனுப்பியுள்ளார். அதன்படி ஈஸ்வரியும் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். திருமணமாகி 3 மாதங்கள் ஆகியும் கணவரிடம் இருந்து அழைப்பு வராததால் ஏமாற்றத்தில் இருந்த ஈஸ்வரி, நேராக கணவர் ராம்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை அனுமதிக்க மறுத்த ராம்குமாரின் பெற்றோர், வீட்டை விட்டு வெளியே போகுமாறு கண்டித்துள்ளனர்.

இதனால், கணவர் ராம்குமார் வீட்டு முன்பு அமர்ந்து ஈஸ்வரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்து வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்படாத ராம்குமாரின் பெற்றோர், ஈஸ்வரி அங்கிருந்து செல்லவில்லை என்றால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து ஈஸ்வரியை சமாதானம் செய்த காவல்துறையினர், மேல் அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் ஈஸ்வரி போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்பினார். 

ALSO READ | ’பொறுமையை சோதிக்காதீங்க’ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆவேசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News