அண்ணாமலை மீது புகார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பழைய சோறு டாட் காம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. இவர் பா.ஜ.க வில் உள்ளாட்சி மேம்பாட்டு துறை மாநில செயலாளராக இருந்தார். இவரை கடந்த 21 ஆம் தேதி கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்து இருந்தது. இந்நிலையில் அண்ணாதுரை இன்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில்  தனது உணவகத்தில் இருந்த பொருட்களை பாஜகவினர் அகற்றி விட்டு, அங்கு சேவை மையம் என போர்டு வைத்து இருப்பதாக  கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்தார். 


மேலும் படிக்க | டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் லட்சக்கணக்கில் மோசடி..! லைக் செய்யும் முன் உஷார் மக்களே!


பொருட்களை திருடிவிட்டனர்


பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், " பழையசோறு டாட் காம் என்ற பெயரல் சென்னை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் உணவகம் வைத்துள்ளேன். கோவையில் எனக்கும் உணவகத்தின்  கட்டிடத்தின் உரிமையாளருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. பா.ஜ.க கட்சியில் இருப்பதால் வீட்டின் உரிமையாளர், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து இது தொடர்பாக முறையிட்டு இருக்கிறார். இதனையடுத்து மாநில தலைவர் அண்ணாமலை  கோவை  மாவட்ட பா.ஜ.க தலைவருக்கு போன் செய்து கட்டிடத்தில் இருக்கும் பொருட்களை அகற்ற சொல்லி இருக்கிறார். மாவட்ட தலைவர்  பாலாஜி உத்தம ராமசாமி கட்சி நிர்வாகிகளை அழைத்துச் சென்று பழையசோறு டாட் காம் உணவகத்திறகுள் நுழைந்து பொருட்களை திருடி விட்டு, அந்த கட்டிடத்தில்  பாஜக கொடியை நட்டு வைத்துள்ளனர். 


கொலை மிரட்டல் வருகிறது


மேலும் அங்கு சேவை மையம் என்று போர்டு வைத்திருக்கின்றனர். இப்படி சேவை செய்வார்கள் என தெரிந்திருந்தால் அந்த கட்சிக்கு சென்றிருக்க கூட மாட்டேன். என்ன  நடந்தது என்பதை என்னை அழைத்து விசாரிக்காமல் கடையை காலி செய்து இருக்கின்றனர். இப்பொழுது குண்டர்களை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.  வேறு வழி இல்லாமல் இப்பொழுது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். உணவகத்தின் உள்ளே இருக்கும் குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தலைவர் அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


அண்ணாமலை நேரடி தலையீடு


நீதிமன்றத்தில் எனக்கும் கட்டிட உரிமையாளருக்கும் இடையே வழக்கு  இருக்கும்பொழுது, அதற்குள் நுழைந்து எப்படி என்னுடைய பொருள்களை எடுத்துச் செல்ல முடியும்?. கட்சியில் இருந்து என்னை  நீக்கியதாக நேற்று சொன்னார்கள். எப்படி நீக்கினார்கள் என தெரியவில்லை. நீக்கியதாக அதிகார்வபூர்வமாக  இதுவரை எந்த தகவலும் எனக்கு  வரவில்லை. இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் நேரடியாக தலையிட்டு இருக்கிறார். அவர் மீதுதான் புகாரை கொடுத்திருக்கிறேன். அண்ணாமலை மீதும், மாவட்ட தலைவர் பாலாஜி மீதும் அவருடன் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையில் இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்  என்ன ஆனது? என தெரிவில்லை" என குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். 


மேலும் படிக்க | சாம்பாரில் விஷம் கலந்து மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்! ஒன்றரை வருடம் கழித்து பிடிபட்ட சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ