கமல்ஹாசன் தொகுத்து நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதாக கூறி கமல்ஹாசன் மற்றும் நிகழ்ச்சியை நடத்தும் தனியார் நிறுவனத்தின் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல்ஹாசன் தலைமையில் 100 நாள் நிகழ்ச்சியாக ஒரு தனியார் தொலைகாட்சி ஒன்று பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த முதல் பாகம் மக்கள் மத்தியில்பெரும் வெற்றியை பெற்று தந்தது ஆனால் இதன் இரண்டாம் பாகம் மிகவும் மோசமாக இருப்பதாகவே மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது. 


இந்நிலையில் சமீபத்தில்  பிக்பாஸ்-2-ல் சர்வாதிகாரி என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் சர்வாதிகாரியாக உள்ள பெண் பொதுமக்களை கொடுமை படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். அப்போது அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என வழக்கறிஞர் லூயிசான் ரமேஷ் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 


இந்நிலையில் இதன் அடிப்படையில் பிக்பாஸ்-2, பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நடத்தி வரும் தனியார் நிறுவனம் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் அளித்துள்ளார்.