சென்னை எண்ணூரில் முருகப்பா குழுமத்தை சார்ந்த கோரமண்டல் உர தொழிற்சாலையை மூட வலியுறுத்தி சின்ன குப்பம் பெரியகுப்பம் எர்ணாவூர் குப்பம் தாழாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமத்தினர் இரு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணூர் கடற்கரை சாலை பெரிய குப்பம் பகுதியில் 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து அமோனியா மூலப்பொருளாக பயன்படுத்தி உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் லாரிகள் மூலம் கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மழைக் காலங்களிலும் மேகமூட்டம்  இருக்கும் நேரத்திலும் தொழிற்சாலையில் இருந்து அடிக்கடி அமோனியா கசிவு ஏற்படுவதாகவும் இதனால் எண்ணூர் பகுதி முழுவதுமே பாதிப்புகள் ஏற்படுவதாக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து நேற்று இரவு கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து கடலுக்குள் உள்ளே இருக்கும் குழாயில் சுத்தம் செய்யும்பொழுது அமோன்யா குழாய் வெடித்து சிதறியதில் அமோனியா வாயு  வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதுமே அமோனியா கசிவு ஏற்பட்டதால் சின்ன குப்பம் பெரியகுப்பம் எர்ணாவூர் குப்பம் பகுதியைச் சார்ந்த மக்களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.


மேலும் படிக்க | சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!


இது தொடர்பாக மூச்சுத் திணறலால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் எட்டு பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவோடு இரவாகபகுதியில் இருக்கும் கிராம மக்களை வேறு இடத்திற்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அமோனியா கசிவு ஏற்பட்ட குழாயை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் வாயு கசிவு உறுதி செய்யப்பட்டது. அளவுக்கு அதிகமாக காற்றிலும், கடல் நீரிலும் இருப்பது தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் உரத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.


இந்த சூழலில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எர்ணாவூர் குப்பம் சின்ன குப்பம் பெரியகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாகவும், இந்த தொழிற்சாலையால்  பாதிக்கப்பட்ட நெட்டுக்குப்பம் தாழகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீன கிராம மக்கள் தொழிற்சாலைகள் உள்ளே செல்லும் இரண்டாவது கேட்டில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் எண்ணூர் கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. தொழிற்சாலை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது... முழு பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ